Saturday, March 6, 2021

குரல் இல்லாமல் இருப்பவர்களுக்காக பேசுங்கள்!

உலகின் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அவற்றைப் பாதுகாப்பதற்காகவும் ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளின் கீழ் வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுகின்றது. இவ் ஆண்டிற்கான (03 மார்ச் 2021) கருப்பொருளாக பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் நிலை நிறுத்துகிறது வனவிலங்குகள் என்பது ஒரு பிராந்தியத்தின் அனைத்து வளர்ப்பு பூர்விக தாவரங்களையும் விலங்குகளையும் குறிக்கின்றது.

பூமின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய காடுகள் அனைத்து நிலப்பரப்பு, விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளின் 80 விதம் வீடாகும். எமது கடல் ஆறுகள் குளங்களில் உள்ள மீன்களில் இருந்து பூக்களிள் விளையாடும் தேனீக்கள் வரை எமது வாழ்வியழில் பெரும் பங்கு வகிக்கின்றது. இந்த உயிரினங்கள் அனைத்தும் பல்லுயிர் பெருக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்குகின்றது. வனவிலங்கு இல்லாத நிலையில் பூமியின் சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்படையும் மற்றும் சுற்றுச்சூழலை சமநிலைபடுத்துவதில் வனவிலங்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இது அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புக்கள், பாலைவனம், மழைக்காடுகள், சமவெளி மற்றும் பிறபகுதிகளில் காணப்படுகின்றது. மரங்கள் தாவரங்கள் பெருக்கத்திற்கும் தப்பவெப்பநிலை சமன்பாட்டிற்றும் காடுகள் பராமரிக்க வேண்டியது அவசியம். இயற்கை வளங்கள் மூலம் எமக்கு அண்ணியசெலவானியை ஈட்டித்தருவது விலங்குகளும் தாவரங்களுமே இவ்வாறான இடங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன.

உலகில் பல நாடுகளில் புகழ்பெற்ற பல வனவிலங்கு சுற்றுலாத்தளங்கள் உள்ளன. விலங்கினம் பற்றிய கல்வி அறிவிக்கும் ஆராய்ச்சிகளுக்கும் சில அபூர்வ இனங்களை அழிவில் இருந்து மீட்டு புத்துயிர் அளிக்க வனவிலங்கு பாதுகாப்பிடங்கள் உதவுகின்றன.

வன உயிர்களின் அழிவானது மனித வாழ்வின் ஆரோக்கியம் உட்பட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். வனவிலங்குகளின் தீவிர வீழ்ச்சியானது பூமியின் இயற்கைச் சூழலை பாதிக்கின்றது.

வனவிலங்குகளின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வாழ்விட இழப்பு காணப்படுகின்றது. உயிரியல் பண்முகதன்மையின் இழப்பில் 80விதம் வாழ்விட இழப்பாகும். வனவிலங்கு அழிவு வீகிதத்தில் உலகின் உயிரினங்களில் கிட்டதட்ட 20விதம் அடுத்த 30ஆண்டுகளில் அழி;ந்து போகும். மேலும் இவைகளின் எண்ணற்ற மறைவு வருங்கால சந்ததியினர் காணமல் போவதை துரிதப்படுத்தும், இது நம்மை பெரும் ஆபத்தில் ஆழ்த்தும் ஒவ்வொரு நாளும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் வளர்ந்துவரும் உயிரினங்களின் எண்ணிக்கை அழிவை நோக்கி முன்னேறுகின்றது. இதில் அழிவை நோக்கி உள்ள உயிரினங்கள் கடந்த 2000 ஆண்டுகளில் 106 விலங்கு இனங்களும் 140 பறவை இனங்களும் அழிந்துள்ளன. தற்போதைய கணக்கெடுப்பின்படி மேலும் 300 இனங்கள் அழிவின் வாயிலின் உள்ளன. யானை, சிங்கம், புலி, சிறுத்தை, காண்டமிருகம், கரடி, காட்டெருமை, புள்ளிமான், கஸ்துரிமான், முதலை, பாம்பு, மயில், சிங்கவாள் குரங்கு, பறக்கும் அணில் போன்றவற்றில் சில சிற்றினங்கள் அடியோடு அழிந்து போகும் நிலையில் உள்ளது.

மனிதன் தனது எல்லையற்ற தேவைகளுக்காக விலங்குகளை வேட்டையாடுவதன் மூலம் பல அபூர்ப விலங்குகளின் சுவடுகள் தெரியாதவாறு அழித்துவிடுகின்றான். தற்பெருமைக்காகவும், பெருமளவு பணத்துக்காகவும் விலங்கு பொருற்களான தந்தம், தோள், இறைச்சி, பற்கள், கொம்பு, மயிர், எழும்பு மற்றும் அலங்கார, மருத்துவ தேவைக்காகவும் வேட்டையாடி கொன்று குவித்தான்.

மனிதர்கள் இயற்கையுடன் இசைந்து வாழும் வாழ்வினை மாற்றியமைத்து அதன் மூலம் உருவாக்கிய ஆபத்துக்களில் இருந்து விடுதலைபெற வழி தெரியாமல் அவலப்படும் வேளையில் வனவிலங்குகளின் வாழ்வியல் முறையை மாற்றியமைத்து வனவிலங்குகளை மனிதர்களிடம் உணவுக்காக பிச்சை (பொறுக்கிதின்னி) எடுக்கும் நிலைக்கு கொண்டுவந்த பெருமை மனித குலத்தையே சேரும். உதாரணமாக நம் நாட்டில் கதிர்காமம், திருகோணமலை, சிகிரியா இவ்வாறு பல வழிதடங்களில் உணவுக்காக வனவிலங்குகள் கையேந்தும் அவல நிலைகளை காணமுடியும். வனவிலங்குகளுக்கு மனிதர்கள் உணவு அழித்தால் காடுகள் அழியும் காடுகள் அழிந்தால் மனித குலம் அழியும் வனவிலங்குகள் தன் உணவை தானே தேடிக்கொள்வதினால்தான் காட்டின் வளர்ச்சியை பெருக்கமுடியும். இதனால்தான் கடவுளின் முதல் கோயிலாக காடுகள் கருதப்படுகின்றது. கொரோனா தேற்றுநோக்கு மத்தியிலும் உலகெங்கிலும் உள்ள பல்லுயிர் வனவிலங்குகளின் இழப்பை தடுத்து நிறுத்தி எமது எதிர்கால சந்ததியின் பாதுகாப்புக்காக ஒன்று சேர்ந்து உலக ரீதியில் நடவடிக்கை எடுப்பது முன்னரை விட இக்கால கட்டத்தில் மனிதனுக்கு முக்கியமாக காணப்படுகின்றது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் காட்டுத்தீ, வெள்ளப்பெருக்கு, பனிபுயல், நில அதிர்வு, விவசாய செய்கை, நில ஆக்கிரமிப்பு, மணல் அகழ்வு, சட்டவிரோத மின்வேலி, நஞ்சூட்டல், கழிவு பொருட்களை உட்கொள்ளல், பல வழி முறைகளில் வேட்டையாடுதல், வீதி விபத்து மற்றும் புகையிரத விபத்து போன்ற பல்வேறு காரணங்களினால் வனவிலங்குகள் நாளாந்தம் அழிக்கப்படுவது கொஞ்சநஞ்சம் அல்ல.

வனவிலங்குகளுக்கு ஏற்படும் பெரும் ஆபாத்துக்களில் 3/4 விதம் மனிதர்களால் ஏற்படுகின்றது. பொதுவாக விலங்குகளுக்கு நெருப்பை கண்டால் பயம் அதிகம் ஆனால் சர்கஸ்களில் நெருப்பு வளையங்களுக்குள்ளால் குதிக்க வைக்கப்படுகின்றன இவ் விலங்குகள் அச்சத்தினால் தான் இவ்வாறே செய்கின்றனவே தவிர விருப்பப்பட்டு செய்யவில்லையென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

வன விலங்குகளை பாதுகாப்பதற்கு பல உலக நாடுகள், பல பொது அமைப்புக்கள் இறுக்கமான சட்டதிட்டங்கள் இருந்தும் வனம், வனவிலங்குகளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றுக்கு தீர்வு காணமுடியாமல் பல நாடுகள் தினறுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் மரநடுகை, இயற்கை விவசாயம் என்பவற்றை ஊக்கப்படுத்தி காலபோக்கில் வனவள பிரிவென்ற தனியான பிரிவினை உருவாக்கி வனவள, வனவிலங்கு பாதுகாப்பு மேன்பாடு என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வு, மேன்பாட்டுச் செயற்திட்டங்கள், கடுமையான சட்டங்கள் மூலம் வனவளங்கள் உச்சகட்ட பாதுகாப்பில் பாதுகாக்கப்பட்டன

இக் காலகட்டத்தில் தான்; வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அதியுச்ச பாதுகாப்பில் இருந்தன என்பது ஆதார பூர்வமான உண்மை. . இவ் வளங்கல் 2009இன் பின் பல வழிகளிலும் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றை ஓர் இன அழிப்பின் இன்னோர் பரிமாணமாகவே பார்க்கப்படல் வேண்டும். இயற்கை எனது நண்பன் எனும் வாசகமும் எம் மனதில் இருந்து அழிந்துவிடாமல் இருக்க எம் இளைய தலைமுறையினர் இவ் வளங்கள் அனைத்தையும் பாதுகாப்பதில் முன்னின்று உழைக்க வேண்டியது இக்காலத்தின் கட்டாயமாகும்.

Written by   M. Sasikaran

No comments:

Post a Comment